வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கொரோனாவுக்குப் பலி

🕔 August 11, 2021

ல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கொவிட் தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

திடீரென அவர் சுகயீனமடைந்த நிலையில் நேற்று முன்தினம் அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்