பொருட்களை அதிக விலைக்கு விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம்

🕔 August 10, 2021

த்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் 2,500 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தனியார் எரிவாயு நிறுவனங்கள் தங்கள் விநியோக நடவடிக்கையை நிறுத்தியமை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற முடிவு தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்