றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 August 9, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அத்துடன் குறித்த நால்வரையும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இஷாலினி என்பவர் றிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக் காயங்களுக்குள்ளாகி மரணித்தமை தொடர்பில் இவர்கள் கடந்த ஜுலை மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இவர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதன் பின்னர் மேற்படி நால்வரும் கடந்த 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களை ஓகஸ்ட் 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்