கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை

🕔 August 8, 2021

– முகம்மத் இக்பால் –

டோக்யோ ஒலிம்பிக் கராத்தே போட்டி 05.08.2021 தொடக்கம் 07.08.2021 வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று நேற்றுடன் அனைத்து போட்டி நிகழ்சிகளும் நிறைவடைந்ததன.

இதில் பதக்கங்களின் அடிப்படையில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை பெற்று ஜப்பான் முதலாம் இடத்தையும், ஸ்பெயின் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. ஆனாலும் ஜப்பானின் வெற்றி திருப்தியானதல்ல.

கராத்தேயின் பூர்வீகம் ஜப்பான் ஆகும். அதன் ஒவ்வொரு நுட்பங்களும், அசைவுகளும் ஜப்பானியர்களினால் உருவாக்கப்பட்டது. அத்துடன் நுட்பங்களின் அசைவுகளுக்கான பெயர்களும் ஜப்பான் மொழியிலேயே உலகம் முழுவதிலும் உச்சரிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றது.

உலகில் பெரும்பாலான நாடுகளின் தேசிய கராத்தே அணிகளுக்கு ஜபானியர்களினாலேயே பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறிருந்தும் டோக்யோ ஒலிம்பிக் பதக்கங்களின் அடிப்படையில் ஜப்பான் முன்னிலை வகித்தாலும், அதனை ஒரு தனிச் சிறப்புவாய்ந்த வெற்றியாக கருத முடியாது.

ஒலிம்பிக் கராத்தேயில் KATA, KUMITE ஆகிய நிகழ்சிகளில் ஆண், பெண் ஆகிய இரு பாலாருக்குமான மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 32 ஆகும்.

இந்த 32 பதக்கங்களில் ஜப்பான் மூன்று பதக்கங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. மீதமுள்ள 29 பதக்கங்களையும் ஜப்பான் அல்லாத வேறு உலக நாடுகள் பெற்றுக்கொண்டன.

தங்களால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கராத்தே மூலம் அதிகமான பதக்கங்களை பெற்று தனியுரிமை பெற முடியவில்லையே என்ற கவலை ஜப்பானியர்களுக்கு இருந்தாலும், கராத்தேயானது உலகம் முழுவதிலும் ஜப்பானுக்கு நிகராக வளர்ச்சியடைந்து காணப்படுவதுடன், ஐரோப்பிய நாடுகளுடன் வெற்றி பெறுவதென்பது ஜப்பானுக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது.

கராத்தேயில் ‘காத்தா’ என்பது கராத்தேயின் இதயம் என்று அழைக்கப்படுகின்றது. பெண்களுக்கான காத்தா போட்டியின் இறுதி சுற்றில் ஸ்பெயினுடன் ஜப்பான் தோல்வியடைந்தது. இது ஜப்பானுக்கு ஓர் அவமானமாகும்.  

எது எப்படி இருப்பினும், தங்களால் உருவாக்கப்பட்ட கராத்தே உலகம் முழுவதிலும் சிறந்த வளர்ச்சி அடைந்ததன் காரணமாக தங்களுக்கு தோல்வியடைய நேர்ந்ததை எண்ணி ஜப்பானியர்கள் பெருமைப்படுவர்களே தவிர, பொறாமைப்படமாட்டார்கள் என நம்பலாம்.

டோக்யோ ஒலிம்பிக் 2020 கராத்தே போட்டியில் பதக்கங்கள் பெற்ற நாடுகளும் அவை பெற்றுக்கொண்ட பதக்கங்களும் வருமாறு

இந்தக் கட்டுரையாளர் Sri Lanka Karate do Federation அமைப்பின் கிழக்கு மாகாணத்துக்கான தலைவராவார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்