20க்கு ஆதரவளித்தவர்களை மன்னித்து விட்டோம்; அதனால்தான் தௌபீக் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்: மு.கா. தலைவர் தெரிவிப்பு

🕔 August 8, 2021

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாம் மன்னித்து விட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அதனாலேயே 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் – முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக தன்னால் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்படும் எனத் தெரிவித்துள்ள நிலையில், கட்சியின் தேசிய அமைப்பாளராக 20க்கு வாக்களித்த தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போதே, மேற்கண்ட பதிலை ஹக்கீம் கூறினார்.

“20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்புக் கோரியுள்ளனர். அதனால் அவர்களை மன்னிப்பதென கட்சியின் உச்ச பீடம் தீர்மானித்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தௌபீக்கின் வேறு திறமைகளைக் கருத்திற் கொண்டும், கட்சியை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்