விமுக்தி அரசியலுக்குள் வருகிறார்; பரவும் செய்திகளுக்கு சந்திரிக்கா பதில்

🕔 August 8, 2021

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது மகன் விமுக்தி அரசியலுக்குள் வரவுள்ளார் என வெளியாகியுள்ள தகவல்களை மறுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் கூறப்படும் இவ்வாறான தகவல்கள் தவறானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகனுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும், அவர் அரசியலுக்குள் வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை எனவும் சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்ட போது தானும், பண்டாரநாயக்க குடும்பமும் எதிர்கொண்டவற்றை, தனது மகனுக்கு கொடுக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது மகன் அவருடைய நாட்டை நேசிப்பதாகவும், அவர் இலங்கைக்கு சேவையாற்றுவதற்கு – அரசியல் ஒன்று மட்டுமே வழி கிடையாது எனவும் சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்