சிறுவர் தொழிலாளர் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள்

🕔 August 4, 2021

சிறுவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைகள் மற்றும் வேறெந்தத் தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிறுவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்பான செய்தி: சிறுவர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்