கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று, தீ வைத்த தாய் கைது

🕔 July 13, 2021

புதிதாகப் பிறந்த குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கந்தளாயில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 35 வயதுடை பெண் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்தப் பெண்ணின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் ஒரு கள்ளத் தொடர்பில் ஈடுபட்டமையினால் கருத்தரித்ததாகவும், நேற்று குழந்தையை தனது வீட்டில் பிரசவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு குழந்தையை சந்தேக நபர் கொன்றதாகவும், உடலை அழிக்கும் பொருட்டு இறந்த குழந்தைக்குத் தீ வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்