ஆடை மாற்றும் போது படம் எடுத்த ஆண் வைத்தியருக்கு விளக்க மறியல்

🕔 July 12, 2021

பெண் வைத்தியரொருவர் ஆடை மாற்றும் போது படமெடுத்தார் எனும் குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட கொழும்பு பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியரை ஜூலை 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரகாம பிரதேசத்திலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் ஆடை மாற்றியபோது, மேற்படி ஆண் வைத்தியர் படம் எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள வைத்தியர்களுக்கான விடுதியிலுள்ள – குறித்த பெண் வைத்தியரின் அறைக்குள் சந்தேக நபர் சட்டவிரோதமாக நுழைந்து படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் – முன்பு ராகமயிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக இதே குற்றச்சாட்டைக் கொண்ட மேலும் இரண்டு புகார்களும் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்மாந்துறையைச் சேர்ந்த 35 வயதான வைத்தியர் ஒருவரே சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை பெண் வைத்தியரை படமெடுப்பதற்கு சந்தேக நபர் பயன்படுத்திய கைத்தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நன்றி: நியூஸ் வயர்

Comments