இளைஞர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது

🕔 July 12, 2021

ளைஞர்கள் இருவரைத் தாக்கினார் எனும் குற்றச்சாட்டில் சிலாபம் நகர சபைத் தவிசாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் நகர சபைத் தவிசாளர் துஷான் அபேசேகர உள்ளிட்ட இருவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

சிலாபம் – சீத்தாவத்தை பகுதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் நடைபெறற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தாக்கியதாகக் கூறப்படும் இரு இளைஞர்களும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்