நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ராஜிநாமா: பசிலுக்கு வழி விட்டார்

🕔 July 6, 2021

பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, அவரின் பதவியை ராஜநாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜிநாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார் என தெரியவருகிறது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் செல்வதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஜயந்த கெட்டகொட ராஜிநாமா செய்துள்ளார் என, அந்தக் கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.

ராஜிநாமா செய்துள்ள ஜயந்த கெட்டகொட, இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என, லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

யார் இந்த ஜயந்த கெட்டகொட?

இவர் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமை வகித்த ஜனநாயகக் கட்சியில் உறுப்பினராக இருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் சரத்பொன்சேகா சிறை சென்றபோது வெற்றிடமான அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜயந்த கேட்டாகொட நியமிக்கப்பட்டார்.

பின்னர் இவர் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்