கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து தீர்மானம்

🕔 July 5, 2021

மைச்சர் உதய கம்மன்பிலக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அதற்குப் பொறுப்பான அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் வழங்கினர்.

அமைச்சரவையின் அங்கீகாரம் இல்லாமல் எரிபொருள் விலையை அமைச்சர் உதய கம்மன்பில அதிகரித்தாகவும், அதன் மூலம் அரசியலமைப்பை மீறியதாகவும் அவர் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அதற்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமென, ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்