விபத்துக்களால் நாட்டில் தினமும் 35 பேர் பலியாகின்றனர்: சுகாதார அமைச்சு தகவல்

🕔 July 3, 2021

நாட்டில் இடம்பெறும் பல்வேறு விபத்துக்களிலும் சிக்குண்டு, நாளாந்தம் 35 பேர் வரை இறக்கின்றனர் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் பல்வேறுபட்ட விபத்துக்களுக்கு ஆளாகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய – தொற்றா நோய் பிரிவின் விசேட நிபுணர் டொக்டர் சமித ஸ்ரீதுங்க இந்த தகவல்களை வெளியிட்டார்.

இதேவேளை 06ஆவது தேசிய விபத்து தடுப்பு வாரம் எதிர்வரும் 05ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் காலப்பகுதியில் விபத்துக்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பல்வேறு செயற் திட்டங்களை அமைச்சு மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்