ரஞ்சித் பண்டாரவின் இடத்துக்கு பசில்: நாடாளுமன்ற உறுப்பினரான கையோடு நிதியமைச்சையும் ஏற்கிறார்

🕔 June 25, 2021

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

லங்காதீப பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார ராஜிநாமா செய்யவுள்ளதாகவும், அந்த இடத்துக்கு பசில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 06ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள பசில் ராஜபக்ஷ, அன்றைய தினமே நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் லங்காதீப வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்