கல்முனையில் கடலாமைகள், இறந்த நிலையில் கரையொதுங்கின

🕔 June 19, 2021

– நூருல் ஹுதா உமர் –

ல்முனை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பல கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கின.

அண்மையில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து கடலில் ரசாயனம் கலந்ததை அடுத்து, ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

அந்த வகையிலேயே இன்றும் இவ்வாறு கல்முனை பிரதேச கடற்கரையில் ஆமைகள் கரையொதுங்கின.

இன்று மட்டக்களப்பிலும் இறந்த நிலையில் டொல்பின் மீன் மற்றும் ஆமைகள் கரையொதுங்கியதாகவும் தெரிய வருகின்றது.

கரையொதுங்கிய ஆமைகளை வனஜீவராசிகள் திணைக்கள உத்தித்தியோகத்தர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்