நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர், வர்தமானி மூலம் அறிவிப்பு

🕔 June 18, 2021

க்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வின் தலைவர் மற்றும் 04 உறுப்பினர்கள் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.

42 வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் இந்தத் தேர்தலில் எதுவித ஆசனங்களையும் பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு அந்தக் கட்சியின் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்