துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமம்

🕔 May 31, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு;

01) எஸ்.ஆர். ஆட்டிகல – திறைச்சேரி செயலாளர்

02) கலாநிதி பிரியன் பந்து விக்கிரம – நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர்

03) சாலிய விக்கிரசூரிய – இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் தலைவர்

04) துஷான் கொடிதுவக்கு – ஓரல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்

05) எஸ். ஜெராட் ஒன்டச்சி – மர்கன்டைல்ஸ் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்

06 ரொஹான் டி சில்வா – மெக்லரன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்