சஜித், அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று: குணமடையப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 May 23, 2021

திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், அவர்களுக்கு பூரண குணம் கிடைக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரார்த்தித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

‘கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் – என் மரியாதைக்குரிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா மற்றும் அவரது துணைவியார் என் அன்புக்குரிய ஜலானி பிரேமதாஸ ஆகியோர் அந்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மீண்டு வர, எமது நாட்டு மக்கள் அனைவருடனும் இணைந்து எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவருடைய மனைவி ஆகியோருக்கு கொவிட் வைரஸ் தொற்றியுள்ளமை குறித்து தான் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் துரிதமாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர்கள் நலமாக இருப்பார்கள் என நம்புவதாக நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்