புர்காவை தடைசெய்யும் யோசனை, அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை

🕔 March 16, 2021

பொது இடங்களில் புர்கா அணிவதைத் தடை செய்வது தொடர்பான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

பொது இடங்களில் புர்கா அணிவது மற்றும் பதிவுசெய்யப்படாத மத்ரஸா பாடசாலைகளை தடை செய்தல் தொடர்பான பிரேரணையொன்றில் கடந்த 13 ஆம் திகதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கையெழுத்திட்டிருந்துடன் அதனை திங்கட்கிழமை (15) அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, சுகாதார பாதுகாப்பு முகக்கவசங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து முகக்கவசங்களையும் தடை செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் அண்மையில் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்