கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நடவடிக்கையில் இந்திய நிறுவனத்தையும் இணைக்க தீர்மானம்

🕔 March 2, 2021

கொழும்பு துறைமுகத்தி மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன்கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து, அரச மற்றும் தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

35 வருடங்களில் அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்தி மீள கையளிக்கும் வகையில் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கான ஒப்பந்தங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் இடமிருந்து முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு கோரியிருந்த நிலையில், இந்தியாவிடமிருந்து மாத்திரமே முதலீட்டாளருக்கான உடன்பாடு கிடைத்ததாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன்கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்