தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்; ஆணைக்குழுவின் அறிக்கை பிரதியொன்றை தனக்கு வழங்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரியுள்ளார்.

பேராயரின் ஊடக பேச்சாளர் பேராசிரியர் கமிலஸ் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து அறியப்படுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும்.

அவர்கள் தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறு பேராயர் கோரியுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.