அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார்

🕔 January 15, 2021

ரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, கொவிட் நோயாளி ஒருவருடன் நேரடி தொடர்பினைக் கொண்டிருந்தார் என அடையாளம் காணப்பட்டமையை அடுத்து, சுய தனிமைப்படுத்தலில் உள்ளார் .

அன்ரிஜன் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை, அவர் சுய தனிமையில் இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டொக்டர் பாதெனிய வீட்டில் இல்லை என, பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டொக்டர் அனுருத்த பாதெனிய, தனது பேஸ்புக் பக்கத்தில் மேலே உள்ள படத்தை வெளியிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்