ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம்

🕔 January 11, 2021

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த வழக்கை, இனி தொடரப் போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கை தொடர்ந்தும் நடத்தப் போவதில்லை என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில், ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் உள்ளிட்ட ஐவர், கடந்த நொவம்பர் மாதம் 24ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த வழக்கில் சந்தேக நபர்களாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்னாணந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், ராணுவப் புலனாய்வு உதியோகத்தர் எம் சலீம் மற்றும் முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் மதுசாங்க உள்ளிட்டோர் அடையாளம் காணப்பட்டனர்.

Comments