கொரோனாவினால் வயோதிபர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்

🕔 December 24, 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் வயோதிபர்கள் அதிகளவு பாதிக்கப்படுவதாக கொரோனா தடுப்பு ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

குறித்த அச்சுறுத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது அவசியம் என்றும் அதற்காக விசேட சமூகப் பாதுகாப்பு செயற்திட்டமொன்றை உருவாக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“நாட்டின் மிகமுக்கியமான பிரிவினருக்குச் சேவையாற்றுகின்ற கட்டமைப்புகளாகச் சமூகசேவைத் திணைக்களமும் முதியோர் செயலகமும் விளங்குகின்றது.

கொரோனா வைரஸ் பரவலினால் தற்போது நாடு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில், வயோதிபர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண் டும்.

அது மாத்திரமன்றி விசேட சமூகப்பாதுகாப்பு செயற் திட்டமொன்றை உருவாக்குவதும் அவசியமாகும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்