தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

🕔 December 24, 2020

கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை நேற்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பு – 15இல் வசித்து வரும் குழந்தையின் தந்தை எம்.எப்.எம். பாஹிம் மற்றும் தாய் என்.எம். பாத்திமா சப்னாஸ் ஆகியோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்கள்.

தமது குழந்தையை தகனம் செய்தமை தொடர்பில், தங்களுடைய அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறித்த மனுவில் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தையின் மருத்துவ அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்துமாறு, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்னர்.

சுகாதார அமைச்சர், சுகாதார பணிப்பாளர் நாயகம், கொவிட் ஒழிப்பு ராஜாங்க அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் மேற்படி மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்