தலைப்புச் செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர்கள் றமீஸ் அப்துல்லா, கலீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு

– நூருள் ஹுதா உமர் –

தென்கிழக்கு பல்கலைக்கழக கலைக் கலாசார பீட தலைமைப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள றமீஸ் அப்துல்லா மற்றும் எம்.ஐ.எம்.கலீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது தலைமைப் பேராசியர்களாகத் நியமனம் பெற்றுள்ள இருவரையும் பொன்னாடை போற்றி, நினைவு சின்னம் வழங்கி பல்கலைக்கழக சமூகத்தினர் கௌரவித்தனர்.

இந் நிழக்வில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்பான செய்தி: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம்