தேர்தல் கால துஷ்பிரயோகம் தொடர்பில், ஆணைக்குழு மீண்டும் எச்சரிக்கை

🕔 July 9, 2020

ரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்ப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை தனியார் நடவடிக்கைகளுக்காக பயன்பபடுத்துவது சட்ட விரோதமான செயலாக கருதப்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோல் வேட்பாளர்களின் பதவி துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அவை நிரூபிக்கப்பட்டால், கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

Comments