போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, போதைப் பொருள் பணியக அதிகாரிகளுக்கு விளக்க மறியல்

🕔 July 2, 2020

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 12 அதிகாரிகளையும் இம்மாதம் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அதிகாரிகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து, இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர்.

போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் 04 அதிகாரிகள் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். அப்பணியகத்தின் தலைவரையும் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்