மும்பையில் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று; சென்னையிலும் இருவருக்கு பாதிப்பு

🕔 April 20, 2020

ந்தியாவின் மும்பை நகரில் 53 ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 171 ஊடகவியலாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தொற்று உறுதியான பல ஊடகவியலாளர்களுக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவின் சென்னையிலும் இரு ஊடகவியலாளர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பத்திரிகைக்காக கடமையாற்றுபவர் என்றும், மற்றையவர் தொலைக்காட்சிக்காக பணியாற்றுபவர் எனவும் தெரியவருகிறது,

Comments