தலைப்புச் செய்திகள்

வத்தளை, ஜா-எல பகுதிகளிலும் ஊடரங்குச் சட்டம்

கொழும்பின் புறநகர் பகுதிகளான வத்தளை மற்றும் ஜா – எல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

இதேவேளை, புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் சிலாபத்தின் 07 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரொனா தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாட்டிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.