சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து அமைக்கும் கூட்டணியின் சின்னம் குறித்து விரைவில் தீர்மானம்

🕔 January 22, 2020

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியின் சின்னம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் தீர்மானிக்கப்படவுள்ளதாக, சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.

கூட்டணியை உருவாக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments