ஜனாதிபதி தேர்தல் பற்றிய, 10 சுவாரசியத் தகவல்கள்
ஜனதிபதித் தேர்தல் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அது பற்றிய 10 சுவாரசியத் தகவல்களை வழங்குகின்றோம்.
- ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது.
- இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்)
- அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (41 வேட்பு மனுக்கள்)
- அதிநீளமான வாக்குச்சீட்டை கொண்ட ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகின்றது. (2 அடி நீளத்தை விடவும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது)
- இலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட ஜனாதிபதி தேர்தல் இதுவாகும் (400 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது)
- வாக்குபெட்டிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.
- 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதற்தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். (1999ஆம் ஆண்டு தேர்தலில் இறுதியாக பெண்கள் போட்டியிட்டிருந்தனர்)
- இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் போட்டியிடும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். (சுப்ரமணியம் குணரத்னம்)
- ஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல்.
- சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல். (இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டன)