சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாவுக்கு: நிமல் சிறிபால அறிவித்தார்

🕔 October 9, 2019

னாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, இதனை இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.

எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவை வழங்குவது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை, அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சுதந்திரக் கட்சியின் செயற்குழு வழங்கியிருந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பை நிமல் சிறிபால டி சில்வா வெளியிட்டுள்ளார்.

கடந்த உள்ளுராட்சித்ட தேர்தல் முடிவுகளின் படி, நாடு முழுவதும் பொதுஜன பெரமுன அண்ணளவாக 50 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி 36 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 14 லட்சம் வாக்குகள் கிடைத்திருந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்