ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்: இன்று சனிக்கிழமை

🕔 October 5, 2019

னாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சியொனறு இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்து, சுகததாச மைதானத்துக்கு அழைத்து மக்களைப் பாதிக்கும் பொதுவான 05 பிரச்சினைகள் தொடர்பில் வேட்பாளர்களின் தீர்வுகள் குறித்து வினவப்படவுள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களில் பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்களால் பல்வேறு கேள்விகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விசேட குழு மூலமாக இந்த வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது, ஒவ்வொரு வேட்பாளர்களிடமும் 06 வினாக்கள் வினவப்படவுள்ள நிலையில், அனைவருக்கும் சமமான நேரம் வழக்கப்படும் என தெரிவித்த அவர், இந்த 06 வினாக்களில் 05 வினாக்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இறுதி வினா தோராயமாக ​வேட்பாளர்களாலேயே தேர்வு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இறுதியாக மூன்று நிமிடங்கள் திறந்த நேரமொன்று அனைத்து வேட்பாளர்களுக்கும் வழஙகப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு திட்டமிடப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்தவாரே இதனை பார்க்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்