டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

🕔 August 6, 2019

டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 47 பேர் இறந்துள்ளதாகவும், 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜுலை மாதம் இறுதி வரை 234,078 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் கொழும்பு, கம்பாஹா, காலி, களுத்துறை மற்றும் ரத்னபுரி ஆகியவை, டெங்கு தொற்று அதிகமுள்ள மாவட்டங்களாக அடையாளம் கண்டுள்ளதாக, தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிக காய்ச்சல், கட்டுப்பாடற்ற வாந்தி, வயிற்று வலி மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments