பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி, வைத்தியசாலையில் அனுமதி

🕔 July 2, 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக் கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு, சட்டமா அதிபர் தப்புல டீ. லிவேரா நேற்று உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்