முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா; ஜனாதிபதிக்கு கடிதம் கிடைக்கவில்லையாம்

🕔 June 6, 2019

மது பதவிகளை முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும், அதற்கான கடிதங்களை அவர்கள் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை என, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் என 09 முஸ்லிம்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்வதாக திங்கட்கிழமை அறிவித்திருந்தனர்.

ராஜிநாமா செய்ததாக அறிவித்துள்ள அமைச்சர்கள் தமது வாகனங்களை இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், அவர்களின் அலுவலர்கள் தொடர்ந்தும் பதவிகளில் இருப்பதாகவும், அமைச்சர்களுக்கான பாதுகாப்பை அவர்கள் வைத்திருப்பதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனதிபதி செயலகத்திலுள்ள உயர் அதிகாரியொருவரை குறித்த ஊடகம் தொடர்பு கொண்டு கேட்டதாகவும், நேற்று புதன்கிழமை வரை, அவ்வாறான ராஜிநாமா கடிதங்கள் எவையும் தமக்குக் கிடைக்கவில்லை என்று, அந்த அதிகாரி கூறியதாகவும் மேற்படி ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ராஜிநாமா செய்த அமைச்சர்களை தாம் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், அது தமக்கு வெற்றியளிக்கவில்லை எனவும் அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்