ஜனாதிபதியின் மரணத்துக்கு நாள் குறித்த ஜோதிடர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

🕔 January 31, 2019

னாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவாரென திகதி குறிப்பிட்டு ஆருடம் கூறியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து, ​ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவினை நேற்று புதன்கிழமை வழங்கினார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கவனத்தில் எடுத்தே குறித்த ஜோதிடருக்கு எதிராக மேலதிக சட்டநடவடிக்கைகள் எடுக்காமல், அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி இறந்து விடுவாரென ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி இணையத்தளம் ஊடாக பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

இதனையடுத்து இவருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இவர் கடற்படையில் கடமையாற்றிய போது, இலங்கையில் வைத்து 1987ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்