சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், கடமையைப் பொறுப்பேற்றார்

🕔 December 26, 2018
சுகாதார ,போசணை மற்றும் சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் இன்று புதன்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


கொழும்பு  – 10, பத்தேகம விமலவன்ச தேரோ மாவத்தையில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில், சமய வழிபாடுகளுடன் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி ம்ற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்