மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்க அரசாங்கம் முயற்சி: பெப்ரல் குற்றச்சாட்டு
மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக பெப்ரல் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி விளக்கமளிக்கும் போதே இதனைக் கூறினார்.
“சகல மாகாணசபைளுக்கும் ஒரே சந்தரப்பத்தில் தேர்தலை நடத்துவதென்பது ஜனநாயகத்துக்கு சாதகமாக அமைவதோடு தேர்தல் செலவீனத்தை கட்டுப்படுத்துவதிலும் பாரிய பங்களிப்பை செலுத்தும்.
இருப்பினுத் தற்போதைய நடைமுறையில் இது சிக்கலுக்குறிய விடயமாகும்” எனவும் அவர் தெரிவித்தார்.