குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

🕔 July 19, 2018

குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய தந்தையுடன் மேலும் மூவரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 மாத குழந்தையொன்றுக்கு அதன் தந்தை மதுபானம் பருக்கிய வீடியோக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து குறித்த குழந்தையின் தந்தையையும், அப்போது அங்கிருந்த மேலும் மூவரையும் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர்.

இதன்போது சந்தேக நபர்களை ஓகஸ்ட் 01ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்கமுவ நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டபோதே, அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதன்போது, தொலைபேசியுடன் வீடியோ காட்சி மற்றும் மதுபான போத்தல் ஆகியவை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

தொடர்பான செய்தி: குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்