ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித

🕔 June 20, 2018

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடபெற்றபோது அமைச்சர் இதனைக் கூறினார்.

எனினும் அது தொடர்பான விபரங்கள் தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதியை பௌத்த பிக்குகள் சந்தித்துப் பேசியதாகவும், ஞானசாரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து ஜனாதிபதி கவலை தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்