டிலான் எனது காலில் விழுந்தார்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு

🕔 April 23, 2018

“நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, நான் ஜனாதிபதியாக இருந்தபோது, எனது காலில் விழுந்து தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் சென்றவர்” என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது வேறு யாரோ போடும் தாளத்திற்கு  டிலான் பெரேரா நடனமாடுகின்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்தனகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள 16 உறுப்பினர்களில் டிலான் பெரேராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேலும் கூறுகையில்;

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள 16 உறுப்பினர்களில் ஒருவரான டிலான் பெரேரா மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் செல்லவில்லை.

என்னுடைய ஆட்சிக் காலத்தில் எனது காலில் விழுந்து தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்றவர்.

இன்று வேறு யாரோ போடும் தாளத்திற்கு அவர் நடனமாடுகின்றார்.

ஒரு காலத்தில் என்னை மிகச்சிறந்த அரசியல்வாதி என வர்ணித்த அவர் தற்போது என்னை காலாவதியான நூடில்ஸ் என வர்ணிக்கின்றார்.

என்னை சிறந்த அரசியல்வாதி என்று ஒரு காலத்தில் அவர் புகழ்ந்தார். ஆனால் இப்போது என்னை காலாவதியான நூடில்ஸ் என்கிறார்.

காலாவதியான நூடில்ஸ்கள் என வர்ணிக்கப்படும் பத்து பேர் இணைந்தால் உலகையே தலைகீழாக மாற்றிவிட முடியும்” என்றார்.

Comments