கரம்போட் கொள்வனவு மோசடி; முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது

🕔 April 16, 2018

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக  இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ  ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக மஹிந்தானந்த பதவி வகித்தபோது, கரம்போட் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 53 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்