அமைச்சரவை மாற்றம் செய்வதில், அரசாங்கம் காலத்தைக் கடத்துகிறது: நாமல்

🕔 April 12, 2018

ரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து கொண்ட போது, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

“இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதில் காலத்தை கடத்தி வருகிறது.

மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள். அதன் வெளிப்பாடே கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களால் வெளிப்படுத்தப்பட்டது.

தேர்தல் பெறுபேறுகளை கருத்தில் கொண்டாவது அரசாங்கம் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்வார்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அதை இந்த அரசாங்கம் செய்யவில்லை.

அமைச்சரவை மாற்றங்களை செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை கடத்தும் இந்த அரசாங்கம், கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்யவில்லை” என்றார்.

,இன்று வியாழக்கிழமை 04 அமைச்சர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி சரத் அமுனுகம – திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சராகவும் , ரஞ்சித் சியம்பலாபிட்டிய – அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவும், பைசர் முஸ்தபா – விளையாட்டு துறை அமைச்சராகவும், மலிக் சமரவிக்ரம தொழிலாளர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

 

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்