பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; த.தே.கூட்டமைப்பு எதிர்க்கும்

🕔 March 28, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்த்தரப்பினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் என, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி

ஐக்கிய தேசியக் கட்சி கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

இது இவ்வாறிருக்க, நம்பிக்கையில்லா பிரேரணையை அரசியல் கட்சி என்ற வகையில் யாரும் எதிர்க்க முடியாது என, அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அடுத்துவரும் நாட்களில் கட்சி என்ற முறையில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, எதிர்வரும் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அன்றைய தினமே வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.

Comments