உதயங்க கைது; அரசாங்க சார்பு பத்திரிகை மீண்டும் உறுதிப்படுத்தியது

🕔 March 28, 2018

ஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை இலங்கை அரசாங்கம் சார்பான செய்திப் பத்திரிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

துபாயிலுள்ள பாதுகாப்பான இடமொன்றில் வைத்து, உதயங்க கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயங்க கைது செய்யப்பட்டதாக மேற்படி செய்திப் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டபோதும் அதனை, அதிகமான ஊடகங்கள் மறுத்திருந்தன.

இந்தநிலையில் இன்று புதன்கிழமை அரசாங்கம் சார்பான அதே பத்திரிகை, உதயங்க கைதான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

Comments