சிங்களப் பெயரில் இனவாதப் பதிவு: முஸ்லிம் மாணவனுக்கு விளக்க மறியல்

🕔 March 26, 2018

பேஸ்புக் ஊடாக இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவனை, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

சந்தேக நபரான முஸ்லிம் மாணவன், பேஸ்புக்கில் சிங்களப் பெயரில் பதிவுகளை மேற்கொண்டார் என, விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

மேற்படி வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் ஷானிமா விஜேபண்டார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மாணவரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவனை 09 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்