ரத்தினக் கல் கடத்தல் முறியடிப்பு; சிக்கினார் சீனப் பிரஜை

🕔 March 26, 2018

த்தினக் கற்களை நாட்டுக்குள் கடத்துவதற்கு முயற்சித்த சீனப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

12 ரத்தினக் கற்கனை சீனாவிலிருந்து இலங்கைக்குள் சந்தேக நபர் கடத்த முயற்சித்த போது, அவரை சுங்கத் திணைக்களத்தின் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ரத்தினக் கற்களின் பெறுமதி 21 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடத்தல் தொடர்பான மேலதிக விசாணைகளை சுங்கத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்