பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில், பதவி துறக்கவும் தயார்: பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே

🕔 March 23, 2018

 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில், தனது அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கும் தயாராய் உள்ளதாக, பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்துள்ளார்.

பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், தான் கையெழுத்திட்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதியமைச்சர் நிஷாந்த இதனைக் கூறினார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரைத் தவிர, ஏனையோர் – பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பர் என, நான் நம்புகிறேன்” என்றார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையில், கையெழுத்திட்ட சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களில், பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகேயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்